தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2019, 3:36 PM IST

ETV Bharat / international

சிரியா துறைமுகத்தில் ஈரான் கப்பல் ?

லண்டன்: ஜிப்ரால்டரிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் சிரியா துறைமுகத்திற்கு சென்றிருப்பதாக அமெரிக்க தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

adrian darya 1


பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றி செல்வதாக, 'கிரேஸ் 1' என்ற எண்ணெய் கப்பலைப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் அரசு சிறைபிடித்தது

இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசு, ஜிப்ரால்டர் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய விதிகளைச் சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஜிப்ரால்டர் அரசு, ஈரான் கப்பலை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விடுவித்தது.

இதையடுத்து, 'அட்ரியன் தார்யா' Adriyan Darya 1 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த கப்பல் ஜிப்ரால்டரிலிருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், 'அட்ரியன் தார்யா 1' சிரியாவின் டார்டஸ் துறைமுகத்திற்கு சென்றிருப்பதாக மேக்ஸார் டெக்னாலஜிஸ் என்ற அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details