சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சூழலில், இந்த வைரஸ் காரணமாக ஈரானில் புதிதாக 21 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், அந்நாட்டில் பலி எண்ணிக்கை 145ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 823ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, கொவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 669 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஈரான் சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கியாநௌஷ் ஜஹான்பூர் தெரிவித்தார்.