ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முக்கிய புரட்சிகர காவல்படை ஜெனரல் குறித்து, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் ஒருவர் ரகசிய தகவல் வழங்கினார். அதன் தகவலின் பேரில் ஜெனரல் மீது அமெரிக்கா, ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய ஈரான் காவல் துறையினர், ரகசிய தகவல் அனுப்பிய குற்றத்திற்காக ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மஹ்மூத் மவுசவி மஜ்துக்கு சிஐஏ, இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் ஆகியவற்றுடன் தொடர் இருப்பது உறுதியாகியுள்ளது. தகவலை வேறு நாட்டிற்கு வழங்கிய குற்றத்திற்காக மஜ்துக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜனவரி மாதம் பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சோலைமணி கொல்லப்பட்டார்.அப்போது, அவருடன் பல முக்கிய நபர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அரசு, தனது பங்கிற்கு அமெரிக்க படைகள் மீது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.