ஈரானில் மார்ச் மாதம் 19 ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் 1900 கிராமங்கள் மற்றும் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை- ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்! - rains
தெஹ்ரான்: ஈரானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 70 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முழு கொள்ளவை எட்டியுள்ள அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, குஸேஸ்தான் மாகாணத்தில் உள்ள 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள தடைகளால் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரீப் தெரிவித்துள்ளார்.