தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பு தொடரும் - ஆப்பரேஷன் சங்கல்ப்

டெல்லி: வளைகுடா பகுதிகளில் இந்திய வனிக கப்பல்களை பாதுகாக்க, அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்களின் இருப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy in Gulf region
Indian Navy in Gulf region

By

Published : Jan 9, 2020, 5:52 PM IST

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளும் சூழ்நிலை நிலவுவதால் வளைகுடா பகுதிகளில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய வணிக கப்பல்களைப் பாதுகாக்க வளைகுடா கடல் பகுதிகளிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்களின் இருப்பு தொடரும் என்று கடற்படை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆப்பரேஷன் குறித்து பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகிய அமைச்சகங்ளோடு ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

கடற்படையின் ஆப்பரேஷனான 'சங்கல்ப்', கடந்தாண்டு ஜூன் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. வளைகுடா கடல் பகுதிகளில் இந்திய வனிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வளைகுடா கடல்பகுதியில் ஆயுதம் ஏந்திய இந்திய கடற்படையின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் இருப்புதான் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனி ஈரான் வான்வெளியில் ஏர் இந்தியா பறக்காது!

ABOUT THE AUTHOR

...view details