இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. புனித ரமலான் மாதத்தை ஒட்டி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள புனிதத்தலத்தில் வழிபட பாலஸ்தீனியர்கள் குழுமியிருந்த போது இஸ்ரேல் காவல்துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மோதல் வெடித்தது.
அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையான காசாவில் இரு நாள்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறிமாறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருவதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் சிக்கி கேராளவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார்.