ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதியின் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 2015ஆம் ஆண்டு முதல், உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது.
அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் கூட்டுப்படைகள் ஹவுதிகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. இதனால், ஏமன் ஆதரவு கூட்டுப்படைகள் மீது ஹவுதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் நஜ்ரன் மாகாணத்தில் உள்ள 20 ராணுவத் தளங்களை திடீர் தாக்குதல் மூலம் தாங்கள் மூலம் கைப்பற்றியுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 200 சவுதி பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட காணொளி விரைவில் வெளியிடப்படும் எனவும், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரெரி (Yahya sareri) கூறியுள்ளார்.
முன்தாக, கடந்த மாதம் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் குழாய்கள் மீது ஹவுதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.