தெற்கு துருக்கி காசியான்டெப்பில் உள்ள சாங்கோ பல்கலைக்கழக மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர்20) அதிகாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஆக்சிஜன் வென்டிலேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
துருக்கி மருத்துவமனையில் தீ விபத்து: 9 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு - துருக்கி மருத்துவமனையில் தீ விபத்தில் கரோனா நோயாளிகள் உயிரிழப்பு
அங்காரா: துருக்கி நாட்டில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக்குழுவினர், தீ விபத்தில் சிக்கியிருந்த மீதமுள்ள நோயாளிகள் 14 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டு என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசை பட்டியலில் துருக்கி 6 ஆவது இடத்தில் உள்ளது. நேற்று(டிசம்பர் 19) ஒரே நாளில் 22,195 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் அந்நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.மேலும், ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.
TAGGED:
Turkey hospital fire