தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்! - Iran

டெஹ்ரான்: அணு ஆயுத ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிக்கப் போவதாக, ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

ஹசன் ரௌஹானி

By

Published : May 9, 2019, 9:52 AM IST

2015ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்ய, ஜெர்மன் ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

2018ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, தெரிவித்தார். இதையடுத்து, ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா ஒரு தலைபட்சமாக விதித்து வருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வளர்ந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, அணு ஆயுத ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்ய, ஜெர்மன் ஆகிய வளர்ந்த நாடுகள் அணு ஆயுத ஒப்பந்தத்தை புதுப்பிக்க அளித்த வாக்குறுதியை 60 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால், அணு ஆயுத ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகள் புறக்கணிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details