தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனா - பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்க உலக நாடுகளுக்கு ஈரான் வேண்டுகோள் - corona virus iran sanctions

தெஹ்ரான்: கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு ஈரான் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

hassan rouhani
hassan rouhani

By

Published : Mar 15, 2020, 1:40 PM IST

ஈரானின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு 'ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்' கையெழுத்தானது.

ஆனால், ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஈரான் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க, அந்த ஒப்பந்தத்தில் இருந்து தங்கள் நாடு விலகுவதாக 2018ஆம் ஆண்டு அறிவித்தது.

தொடர்ந்து, ஈரான் மீது கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதித்து அமெரிக்க நடத்தி வருவதால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் பரவிவரும் சூழலில், அதன் மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸாரிஃப், "கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த ஈரான் போராடி வரும் சூழலில், எங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு அதிபர் ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவியை கட்டுமிராண்டி அடித்துக் கொல்வதைப் பார்த்துக்கொண்டிருப்பது அறமற்றது. வைரஸ்களுக்கு அரசியலோ, நாடுகளோ தெரியாது. நாமும் அதனைப் போல்தான் இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில், ஈரான் அதிபர் ரவ்ஹானி ஐ.நா.-வுக்கு எழுதியிருந்த கடிதத்தில், "இதுபோன்ற ஆபத்தான பேரிடர் காலத்தில் சர்வதேச பொருளாதாரச் சந்தைகளை அணுகமுடியாத எந்த நாடும் நிலைமையை சமாளிக்க முடியாது" என வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, "மனிதாபிமானற்ற" பொருளாதாரத் தடைகளை விலக்குமாறு, ஈரான் அரசு அமெரிக்காவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. 2019 டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கி இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகில் ஒன்றரை லட்சம் பேரை பாதித்த கொரோனா

ABOUT THE AUTHOR

...view details