இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதி ஹமாஸ் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு கட்டுபாட்டில் உள்ளது. இதனால், இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது ராக்கெட், ஏவுகணைகள் தாக்குதல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், டமாஸ்கஸ் நகரில் சில நாள்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
மசூதி கலவரத்தில் 305 பாலஸ்தீனியர்கள் படுகாயம்
இந்நிலையில், நேற்று (மே.10) மீண்டும் ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் ரமலான் மாத தொழுகைக்கு பாலஸ்தீனயர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அப்போது, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படவே, இஸ்ரேல் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 305 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸின் தொடர் ராக்கெட் தாக்குதல்
இவ்விவகாரம் விஷ்வருபம் எடுக்க தொடங்கியது. பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலை குறிவைத்து கிட்டத்தட்ட 45 ராக்கெட்கள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ராக்கெட் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர் ராக்கெட் தாக்குதல்களால், இஸ்ரேல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தக்க பதிலடி கொடுக்க இஸ்ரேஸ் ராணுவம் முடிவு செய்தது.