தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹஜ் யாத்திரை: சவுதி பாதுகாப்புப் படையினர் அணி வகுப்பு! - ஹஜ் ராணுவ அணிவகுப்பு

ஜித்தா: ஹஜ் புனித யாத்திரையின் போது மக்கா நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள சவுதி பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

saudi

By

Published : Aug 5, 2019, 11:01 AM IST

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை தற்போது தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ராணுவ அணிவகுப்பு

இந்த சூழலில், பாதுகாப்புப் பணிகளுக்காக மக்கா நகருக்கு வரவழைக்கப்பட்ட சவுதி பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு ஆயுதங்கள் ஏந்தி ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

ஹஜ் யாத்திரைக்கு வரும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பே சவுதி அரசின் தலையாய கடமை என்று உணர்த்துவதற்கே இந்த அணிவகுப்பானது நடத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details