பிரேசில் நாட்டில் உள்ள பாரா மாகாணம், பெல்லம் பகுதியில் அதிகளவில் மதுபான கூடங்கள் இயங்கிவருகின்றன. இங்குள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென புகுந்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஆறு பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
மதுபான கூடத்தில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி - gun shot
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மதுபான கூடத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் தாக்குதல் நடத்திய கும்பலில் ஒருவரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நபர்கள் யார், எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.