தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹமாசை நாங்கள் வென்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர்

காஸா மீதான தாக்குதல் தங்களுக்கு வெற்றியைத் தந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

By

Published : May 22, 2021, 9:00 AM IST

இஸ்ரேல்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. காஸா முனை மற்றும் மேற்கு கரை என மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காஸா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்கு கரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் இருக்கிறார். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குறிப்பாக, கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதற்கிடையில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் மே 10ஆம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து காஸா முனையில் இருந்து, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இந்த தாக்குதலையடுத்து காஸா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி மாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர்.

இச்சூழலில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நேற்று (மே 21) சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 11 நாட்களாக நடைபெற்ற சண்டை நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காஸா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்கு கரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் (கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து காஸா முனையில் பாலஸ்தீனர்கள் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் தாங்கள் வெற்றி பெற்றதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சண்டையில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "காஸா முனை மீதான தாக்குதல் சிறப்பான வெற்றி. இந்த மோதலில் எங்கள் இலக்கை (ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது) நாங்கள் அடைந்துவிட்டோம்.

இந்த மோதலில் இஸ்ரேல் பெற்ற நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கோ, ஹமாஸ் அமைப்பிற்கோ அனைத்தும் தெரியாது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதிகள் உள்பட 200-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

காஸா மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி ஜெண்ட்ஸ், "சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறினால், அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details