தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான் போராட்டத்தில் காந்தியம் - ட்விட்டரில் குவியும் பாராட்டு - #IranProtest

தெஹ்ரான்: பெட்ரோல் விலை ஏற்றத்தை எதிர்த்து ஈரானில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு பூங்கொத்து கொடுத்த சம்பவம் ட்விட்டர் வாசிகளிடையே பாராட்டுக்களை குவித்து வருகின்றது.

iran protest flower

By

Published : Nov 21, 2019, 3:34 PM IST

வளைகுடா நாடான ஈரானில் பெட்ரோல் விலை கடந்த வாரம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து ஈரானியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் பெரும்பாலும் கலவரத்தில் முடிவதால் வன்முறைச் சம்பவம், உயிரிழப்புகளும், நடந்தேறுகின்றன. கலவரத்தை கட்டுப்படுத்த ஈரான் அரசு இணையச் சேவையை துண்டித்துள்ளது. ஈரான் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமினிஸ்ட் இண்டர்நேஷனல் என்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தச்சூழலில், சில ஈரானிய போராட்டக்காரர்கள் வீதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ பகிர்ந்துவரும் ட்விட்டர் வாசிகள் "மகாத்மா காந்தியின் எண்ணங்கள் இந்த வீடியவில் பரதிபலிக்கின்றன", "அன்பைக் கொண்டு வெறுப்பை எதிர்க்க வேண்டும்" என்றெல்லாம் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க :உய்கர் மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவும் சீனா: அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்!

ABOUT THE AUTHOR

...view details