கரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தடுப்பு நடவடிக்கை குறித்து உலகின் 20 முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பான ஜி-20 நாடுகளின் அவசரக் கூட்டம் கடந்த 26ஆம்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் காணொலி கட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”ஜி 20 நாடுகளைச் சேரந்த மக்களே 90 விழுக்காடு கரோனா வைரஸ் பாதிப்பையும், 88 விழுக்காடு கரோனா உயிரிழப்பையும் சந்தித்துள்ளனர். மக்களைக் காப்பாற்றுவதற்கு ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவசரத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.