ஐக்கிய அமீரக நாட்டில் வசித்துவரும் இந்தியர்களுக்காக, தலைநகர் அபுதாபியில் இந்துக் கோயில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் அளவிலான நிலத்தை அந்நாட்டுப் பட்டத்து அரசர் ஷேக் முகமுது பின் ஜெயீத் அல் நயான் பரிசாக வழங்கியுள்ளார்.
அபுதாபியில் இந்து கோயிலுக்கு அடிக்கல்! - பாப்ஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயன் மந்திர்
அபுதாபி: அபுதாபியில் முதல்முறையாக இந்துக் கோயில் எழுப்புவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
பாப்ஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயன் மந்திர் கேயில் வரைபடம்
இந்நிலையில், இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றது. இதில், மஹன்ந் ஸ்வாமி மஹாஜன் அமைப்பைச் சேர்ந்த மது குரு ஸ்வாமிநாராயண சாஸ்தா தலைமையில் 50க்கும் மேற்பட்ட இந்து சாமியார்கள், பூசாரிகள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியை தங்கள் நாட்டின் மூன்றாவது அரசு அலுவலக மொழியாக்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
Last Updated : Apr 21, 2019, 7:58 AM IST