அணுகச்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் போர்க் கப்பல்கள், விமானங்கள், மற்றும் ராணுவத்தை அமெரிக்கா குவித்துவருகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்த மோதல் குறித்து ஈரானுக்கான சீன தூதர் பேங் சென் கூறுகையில், வருங்காலத்தில் அமெரிக்கா வீழ்வது உறுதி என்றும், இது ஈரான்-சீனா இருநாட்டிற்கும் வெற்றியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானுடனான தனது சந்திப்பு இருதரப்பு உறவை பலப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.