தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அரசு முறை பயணம்: குவைத் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியா-குவைத் உறவை வலுப்படுத்தும் விதமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Jaishankar
Jaishankar

By

Published : Jun 10, 2021, 4:18 PM IST

வெளியுறவுத்துறை அமைச்சர் அரசு முறைப் பயணமாக, குவைத் சென்றுள்ளார். எண்ணெய் வளம் பொருந்திய மத்திய கிழக்கு நாடான குவைத்துடன் உறவை மேலும் சிறப்பாக்கும் நோக்கத்துடன் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அகமது நாசர் அல் முகமது அல் சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தும் விதமாகக் கூட்டுக் குழு ஒன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, மனித வளம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், இந்தக் குழு இணைந்து செயல்படும். ஜெய்சங்கரின் தற்போதைய பயணத்தில், இந்தக் குழு குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கோவிட்-19 இரண்டாம் அலையில் சிக்கித்தவித்த இந்தியாவிற்கு கப்பல் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகளை குவைத் அரசு அளித்தது. இதற்கும், அந்நாட்டு பிரதிநிதிகளிடம் ஜெய்சங்கர் நன்றி தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:50 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details