தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7.5 ஆக பதிவு - earthquake

லிமா: பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவு கோலில் 7. 5ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பெருநாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By

Published : May 26, 2019, 5:12 PM IST

இதுகுறித்து புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.5 ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள யுரிமாகுவாஸ் (Yurimaguas) எனும் நகரிலிருந்து 158 கி.மீ தூரத்திலுள்ள வடக்கு-வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் சுமார் 114 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் அதிர்வு உணரப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்து மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details