டெல்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் குவைத் பயணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டுக்கு மூன்று நாள்கள் பயணமாக செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அல் அகமது அல் சபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னதாக மூன்று மாதத்துக்கு முன்னர் எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, மனிதவளம் மற்றும் தொழிலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்த ஒரு கட்டமைப்பை வகுக்க இரு நாடுகளும் ஒரு கூட்டு அமைச்சக ஆணையத்தை நிறுவ முடிவு செய்திருந்தன.
இது மட்டுமின்றி 2021-22 ஆண்டு இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 60ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான இயற்கையான இருதரப்பு நட்புறவு வலுவான மக்கள் தொடர்புகளால் ஏற்பட்டது.
ஏனெனில் குவைத்தில் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் உள்ளது. அதாவது இந்தியாவின் எண்ணெய் தேவைகள் குவைத்தில் இருந்தே அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
முன்னதாக, குவைத் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகமது நாசர் அல்-முகமது அல்-சபா மார்ச் 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: குவைத் நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : பதவியை ராஜினாமா செய்த பிரதமர்