தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

துபாயில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி கதவு! - disinfection gatest dubai

துபாய்: துபாயில் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் நோக்கில் கிருமிநாசினி பொருத்தப்பட்ட கதவுகளை உருவாக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று களமிறங்கியுள்ளது.

dubai sanitation door
dubai sanitation door

By

Published : Apr 30, 2020, 9:40 AM IST

துபாயில் கரோனா பெருந்தொற்று பரவிவரும் சூழலில், அங்கு அமலிருந்த ஊரடங்கு சமீபத்தில் தளர்த்தப்பட்டது. இதனால் நீண்டகாலமாக வீட்டியிலேயே அடைந்துகிடந்த மக்கள் மெள்ள மெள்ள வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே வரும் நபர்கள் முகமூடி அணிய வேண்டும் என்றும், மால், பல்பொருள் சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தகுந்து இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், கரோனா தொற்று நோய்ப்பரவலைத் தடுக்க கிருமிநாசினி பொருத்தப்பட்ட கதவுகளை உருவாக்கும் பணியில் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் ஹூசாம் ஜமார் கூறுகையில், "அரசாங்க, தனியார் வாடிக்கையாளர்களுக்கு இதனைத் தயாரித்துவருகிறோம்.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்களோ அதுபோலவே இந்தக் கதவுகளையும் ஏற்றுக்கொள்வர். விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 90 விழுக்காடு வெளிநாட்டவர் என்பதால் அங்கு அச்சம் நிலவிவருகிறது.

அந்நாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 300 பேருக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 89 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம்

ABOUT THE AUTHOR

...view details