தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய துபாய் இந்தியர் - Dubai Indian businessmen Joginder singh salariya pakistan prisoner

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 13 கைதிகள் நாடு திரும்புவதற்குத் துபாயில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபரான ஜொகிந்தர் சிங் சலாரியா உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

Joginder Singh salariya

By

Published : Oct 16, 2019, 7:35 PM IST

துபாய் நாட்டில் வசித்துவரும் ஜொகிந்தர் சிங் சலாரியா என்ற தொழிலதிபர் பெஹல் என்ற பெயரில் தொண்டு அமைப்பு ஒன்றை நடத்திவருகிறார்.

இவர் துபாயில் சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்த கைதிகளுக்குப் பேருதவி ஒன்றை தற்போது செய்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, உகாண்டா, சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 13 கைதிகள் நாடு திரும்ப உதவும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார். அத்துடன் தனது செலவிலேயே பயணச்சீட்டையும் வாங்கித்தந்துள்ளார் சலாரியா.

1993ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்துவரும் சலாரியா துபாய் காவலர்களுடன் இணைந்து தொண்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கைதிகளுக்காக சலாரியா மேற்கொண்ட நடவடிக்கை பலரது பாராட்டை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா திடீர் ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details