சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான யுத்தத்திலிருந்து தப்பிக்க, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்லிப் மாகாணத்துக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் தற்போது அம்மாகாணத்தின் வடக்குப் பகுதியில் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஏழ்மையின் பிடியில் உள்ள இந்த மக்களை கோவிட்-19 பெருந்தொற்று தாக்கினால், பேரழிவு ஏற்படும் என அங்குள்ள மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அங்கு பணியாற்றிவரும் மருத்துவர் கோமா காஹிரிடம் கூறுகையில், "இதுவரை இங்கு யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழல் எழும் பட்சத்தில் இவர்களுக்குச் சிகிச்சை செய்யக்கூடிய வசதிகள் இங்கில்லை.
புலம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகள் இங்குள்ள மக்களைப் பரிசோதனை செய்ய எங்களுக்கு ஒரே ஒரு கருவிதான் தரப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள், முகமூடிகள், கிருமிநாசினிக் கருவிகள் எனப் பல கருவிகள் தேவைப்படுகின்றன" என்றார்.
இந்த மக்களைப் பாதுகாக்க இத்லிப் மாகாண சுகாதாரத் துறை அலுவலர்கள் தங்களிடம் உள்ள குறுகிய ஆதாயத்தை வைத்து போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா:மத்திய கிழக்கு குழந்தைகளின் நலனுக்குக் கூடுதல் நிவாரணம் தர யுனிசெப் கோரிக்கை