இஸ்ரேலிய ராணுவத்தினரும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அலி அபு ( வயது 13) என்ற சிறுவனின் வயிற்றில் குண்டடி பட்டது. இதில் பலத்தக் காயமடைந்த அந்தச் சிறுவன் நேற்று (டிச.04) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இஸ்ரேலிய ஆயுதப்படை சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்திய பாலஸ்தீனியர்கள்! - பாலஸ்தீனியர்கள் இரங்கல்
அல்முகேயர் : இஸ்ரேலிய ஆயுதப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 வயதுடைய சிறுவனுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்தச் சிறுவனுக்கு இன்று (டிச.05) இறுதிச்சடங்கு செய்வதற்காக அச்சிறுவனின் உடலை பாலஸ்தீனிய கொடியினால் மூடி வீதிகளில் சுமந்து சென்ற பாலஸ்தீனியர்கள், ‘தியாகியே, எங்கள் ஆத்மாவையும் ரத்தத்தையும் கொண்டு உங்களை மீட்போம்’ எனக் கத்தி முழக்கமிட்டனர்.
இந்தத் தாக்குதலில் வெடிபொருள்களைப் பயன்படுத்தவில்லை என இஸ்ரேல் ராணுவம் முன்னதாக மறுப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையும்போது மோதல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.