தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எகிப்தில் கட்டட விபத்து, 5 பேர் உயிரிழப்பு!

கெய்ரோ: மத்திய தரைக் கடல் நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் அமைந்திருந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய அலுவலர்கள் தெரிவித்தனர்.

எகிப்தில் கட்டட விபத்து, 5 பேர் பலி!
எகிப்தில் கட்டட விபத்து, 5 பேர் பலி!

By

Published : Dec 3, 2020, 11:26 AM IST

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் மொஹரம் பெக் சுற்றுப்புறத்தில் அமைத்திருந்த மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களைத் தேடுவதற்கு, இடிந்து விழுந்த கட்டடத்தில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். புல்டோசர்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பேசிய அலெக்ஸாண்ட்ரியாவின் ஆளுநர் முகமது எல்-ஷெரீப், கட்டடம் இடிந்து விழுந்தபோது, ஒன்பது பேர் அடங்கிய இரண்டு குடும்பங்கள் கட்டடத்திற்குள் இருந்தனர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது 1940ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய கட்டடம்" என்று அல்-ஷெரீப் கூறினார்.

அலெக்ஸாண்ட்ரியா மற்றும் கெய்ரோ போன்ற பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் பிரீமியத்தில், பெரிய லாபங்களை அடையும் நோக்கில், அரசு அனுமதித்த திட்டமிடல் அனுமதிகளைமீறி அதிகளவில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. முறையான அரசாங்க அனுமதி இல்லாமல் கூடுதல் தளங்கள் பெரும்பாலும் எழுப்பப்படுகின்றன.

எகிப்தில் கட்டட விபத்து, 5 பேர் உயிரிழப்பு

எகிப்து அரசாங்கம், நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அகற்றுதல், விதிமீறலில் ஈடுபவர்களை சிறையில் அடைத்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: மறைந்தார் 'மசாலா அரசன்'

ABOUT THE AUTHOR

...view details