துருக்கியில் சம்சன் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதியில் சில நாட்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது. கனமழை பெய்ததால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சம்சன் மாகாணத்தில் உள்ள கருங்கடலுக்கு அருகே இருக்கும் பாலத்தை மக்கள் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சிலர் அதனை உபயோகித்து வந்தனர்.
திடீரென்று இடிந்து விழுந்த பாலம்: வைரல் வீடியோ! - இரண்டு பேர் படுகாயம்
துருக்கியில் பெய்த கனமழையால் சம்சன் மாகாணத்தில் உள்ள கருங்கடலுக்கு அருகே, பாலம் திடீரென்று இடிந்து விழுந்து இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
turkey
இந்நிலையில், சம்சன் மாகாணத்தில் உள்ள கருங்கடலுக்கு அருகே உள்ள பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், பாலத்தில் நின்றிருந்த கார், மினி பஸ் சேதமடைந்துள்ளது. திடீரென்று இடிந்து விழும் பாலத்தின் சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.