மாஸ்கோ:ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்பூட்னிக்-வி கரோனா தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த, பொலிவியா நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாக, ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஸ்பூட்னிக்-வி பரிசோதனை தரவுகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் கூறுகையில், "ஸ்பூட்னிக்-வி கரோனா தடுப்பூசிக்கு பொலிவிய அரசு அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் அந்நாட்டில் பலரது உயிர்கள் காக்கப்படும். அதேபோல், கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். லத்தின் அமெரிக்க நாடுகள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை அங்கீகரிக்க முன்வர வேண்டும்" என்றார்.