தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போர் நிறுத்தத்தை தொடருங்கள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே போர் நிறுத்தம் தொடர வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன் அழுத்தம் அளித்துள்ளார்.

By

Published : May 25, 2021, 5:05 PM IST

Antony Blinken
Antony Blinken

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே ஏற்பட்ட 11 நாள்கள் மோதலில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் மிகக்குறைவான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளது.

ரமலான் மாத வழிபாட்டின்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் ஏற்பட்ட மோதல், இரு தரப்பு போராக மாறியது. இஸ்ரேலும், பாலஸ்தீன கிளர்ச்சிக் குழுவான ஹமாசும் போரைக் கைவிட வேண்டும் என ஐநா சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என பல சர்வதேச அமைப்புகள் மூலம் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் வந்தடைந்த பிலிங்கன், பிராந்தியத்தில் அமைதி நிலவ போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details