தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காது கேட்காத குழந்தை தாயின் குரலை முதன்முதலாகக் கேட்கும் க்யூட் காணொலி!

லண்டன்: செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை தனது தாயின் சத்தத்தை முதன்முதலாகக் கேட்கும் காணொலியைத் குழந்தையின் தந்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

cute video
க்யூட் வீடியோ

By

Published : Dec 7, 2019, 8:47 PM IST

இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷைர் (North Yorkshire) மாகாணத்தில் ஹாரோகேட் பகுதியில் வசித்துவரும் பால் அடிசன்-லூயிஸ் தம்பதிக்கு, பிறந்து நான்கு மாதங்களான ஜார்ஜினா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஆனால், ஜார்ஜினாவிற்கு பிறக்கும்போதே செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. மெல்லிய சத்தத்தைக்கூட கேட்கமுடியாமல் வளர்ந்த அந்தக் குழந்தைக்கு, காது கேட்கும் கருவியை பெற்றோர் பொருத்தியுள்ளனர்.

அப்போது, குழந்தையின் தாயார் லூயிஸ், ஜார்ஜினாவிடம் அனைவருக்கும் 'ஹலோ சொல்லு' எனக் கூறுகிறார். தாயாரின் சத்தத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் அக்குழந்தை சிறிது நேரம் உற்றுப்பார்க்கிறது. லூயிஸ் மீண்டும் 'ஹலோ சொல்லு' என மூன்று முறை கூறுகிறார்.

இதனையடுத்து, உடனடியாகக் குழந்தை சிரித்துக்கொண்டே தனது மழலை மொழியில் 'ஹலோ' என்று சொல்கிறது. இதைக் கேட்டுப் பெற்றோர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். இந்த நிகழ்வை ஞாபகமாக வைத்திருக்கு காணொலி எடுத்தனர்.

இந்தக் காணொலியை குழந்தையின் தந்தை பால் அடிசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: 'என்னமா யோசிக்கிறாங்க' - மனிதர்களே சூட்கேஸிடமிருந்து இதனைக் கற்றுக் கொள்ளுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details