ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மோகதீஷுவில் இன்று (ஆகஸ்ட் 8) பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ராணுவத் தளத்தில் நடைபெற்ற இத்தாக்குதலில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியா நாட்டின் முக்கியப் பயங்கரவாதக் குழுவான அல்-ஷபாப் பிராந்தியத்தின் முக்கியப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
சோமாலியாவுக்கு வரும் பயணிகளைக் குறிவைத்தே இந்த அமைப்பு தாக்குதல் நடத்திவருவதால் சோமாலியாவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அங்கு கரோனா பாதிப்பு தாக்கமும் குறைவாகவே உள்ளது.
அல்-ஷபாப் அமைப்பின் மீது அமெரிக்க பாதுகாப்புப் படை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறாது. கடந்த ஓராண்டில் மட்டும் 63 தாக்குதலை அமெரிக்க விமானப் படை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சீனா, ரஷ்யா, ஈரான் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆபத்து