லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று (ஆக.5) சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. முதலில் சிறிய பட்டாசு சத்ததுடன் கேட்ட இந்த வெடிப்பு பின், ஆரஞ்சு பிளம்பாய் ஆனது.
இந்த வெடிப்பால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன. தலைநகர் பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வெடிப்பால், பெய்ரூட்டில் உள்ள கடலில் ராட்சத அலை எழுந்துள்ளது.
லெபானில் பயங்கர குண்டு வெடிப்பு இது குறித்து லெபனானின் செஞ்சிலுவை சங்க அலுவலர் ஜார்ஜஸ் கெட்டானே கூறுகையில், “இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்” என்றார்
இந்த வெடி வெடிப்பில் 73 பேர் உயிரிழந்தும், மூன்றாயிரத்து 700 பேர் காயம்டைந்தும் உள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லெபானில் பயங்கர குண்டு வெடிப்பு இந்நிலையில், பெய்ரூட் வெடிப்பையடுத்து, அங்கு வசித்துவரும் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால், குறிப்பிட்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளும்படி, பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பிதீயடையாமல் அமைதி காக்கும்படி தூதரக அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
லெபனானின் இந்திய தூதர் சுஹெல் அஜாஸ் கான் கூறுகையில், “இந்திய மக்களோடு தொடர்பில் இருக்கிறோம். பாதிப்பு குறித்து இன்னும் தெரியவில்லை. அதனால் இந்த சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்றார்.
லெபானில் பயங்கர குண்டு வெடிப்பு லெபனான் பிரதமர் ஹசன் டயப் கவுண்டி பேசுகையில், இந்த பேரழிவிற்கு காரணமானவர்கள் பொறுப்பெற்க வேண்டும். இந்த அழிவிற்கு காரணமானவர்கள் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுப்பிடிப்பேன்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஹசன் ஹமாத், “முதற்கட்ட விசாரணையில், 25 பேர் உயிரிழந்தும், இரண்டாயிரத்து 500 பேர் பாதித்தும் உள்ளன்ர். லெபனான் முழுவதும் அவசர குழுக்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் தலைநகருக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
லெபானில் பயங்கர குண்டு வெடிப்பு இது குறித்து லெபனான் பொது பாதுகாப்பு தலைவர் அப்பாஸ் இப்ராஹிம் கூறுகையில், இந்த வெடிப்பு சில மாதங்களுக்கு முன் ஒரு கப்பலிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளால் ஏற்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது ஆரஞ்சு நிற வாயு வெளிப்பட்டதால், இது நைட்ரஜன் டை ஆக்சைடு வேதிப்பொருள் கொண்ட வெடிப்பொருளாக இருக்ககூடும் என உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பிற்கும் இஸ்ரேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
லெபானில் பயங்கர குண்டு வெடிப்பு ஒரு பக்கம் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் வேளையில், இந்த வெடிப்பு அம்மக்களை இன்னும் பெரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இதையும் படிங்க...காணொலி:லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு!