தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த அர்மேனியா-அசர்பைஜான் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ

சர்ச்சைக்குரிய நகோர்னோ-காாராபக் பிராந்தியத்தில் நிலவிய மோதலை நிறுத்திக்கொள்ள அர்மேனியா-அசர்பைஜான் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

Nagorno-Karabakh
Nagorno-Karabakh

By

Published : Oct 10, 2020, 10:59 AM IST

அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே 15 நாள்களுக்கு மேலாக நிலவிவந்த மோதல் தற்போது அமைதியை நோக்கி திரும்பியுள்ளது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.

சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்த மோதலில் அசர்பைஜான் நாட்டிற்கு அண்டை நாடான துருக்கி ஆதரவு கரத்தை நீட்டி ராணுவ உதவிகளையும் மேற்கொண்டது.

துருக்கியின் தலையீட்டை விரும்பாத ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அமைதிக்கு வழிவகுத்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளும் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

அர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்துள்ளன. சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவால் வறுமைக்கு உள்ளாகும் 15 கோடி மக்கள் : உலக வங்கி

ABOUT THE AUTHOR

...view details