தமிழ்நாடு

tamil nadu

விரைவில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம்: அமெரிக்கா நம்பிக்கை

தோஹா: ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான்களுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மே கலில்சாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 2, 2019, 2:03 PM IST

Published : Sep 2, 2019, 2:03 PM IST

us peace representative khalilzad


ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலவிவரும் உள்நாடுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பல கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது.

இந்நிலையில், தலிபான்களுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக, பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நடத்தும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மே கலில்சாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சல்மே கலில்சாத்

இது தொடர்பாக ட்விட்ரில் அவர் கூறியுள்ளதாவது, அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான காலம் கைகூடி வருகிறது. இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானில் அமைதி, ஒற்றுமை திரும்பவும், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத இறையாண்மையாக அந்நாடு உருவெடுக்கவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details