தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அரசுப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் - 6 பேர் பலி! - -air-raids

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 பேர் பலி

By

Published : May 28, 2019, 11:41 AM IST

சிரியாவில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் உக்கிரத்தை தங்க முடியாமல் பலர் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள அண்டை நாடுகளுக்குச் சென்றனர்.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையாக அரிஹா நகரின் குடியிருப்புப் பகுதியில் அரசுப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், அப்பாவி மக்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு பகுதியில் 100 வான்வழித் தாக்குதல்களும், 93 வெடிகுண்டு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரியாவின் மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details