இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமான மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் மாறிமாறி நடத்திய வான்வெளித் தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப்பகுதியான காசாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் 1,615 வான்வெளித் தாக்குதல் காசா மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 213 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், 448க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.