தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈராக்கில் ஐஎஸ் தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு! - ஐஎஸ் தாக்குதல்

பாக்தாத்: அல்-ரத்வானியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

IS attack near Baghdad
IS attack near Baghdad

By

Published : Nov 9, 2020, 5:26 PM IST

இது குறித்து ஈராக் ராணுவம், "ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அல்-ரத்வானியாவில் ஈராக் ராணுவத்தினருக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் துப்பாகிக்கிச்சூட்டில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2017ஆம் ஆண்டிலிருந்து ஈராக் ராணுவத்தினருக்கும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான ஐஎஸ் அமைப்புகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், சில பயங்கரவாதிகள் நகர்ப்புறங்கள், பாலைவனங்களில் தாக்குதல் நடத்திவருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஈரான் தாக்குதலில் ஒரு அமெரிக்கர்கூட மரணிக்கவில்லை - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details