தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் தாக்குதல் - ஈரான் ஈராக் போர் பதற்றம்

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Iraq
Iraq

By

Published : Jan 21, 2020, 9:43 AM IST

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான சபரன்நியா என்ற பகுதியிலிருந்து ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3ஆம் தேதி ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

அதன்பின்னர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஈரான் அவ்வப்போது தாக்குதல் நடத்திவரும்நிலையில், இன்றையத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details