வெனிசுலா நாட்டின் வடமேற்குப் பகுதியில் அகேரிகுவா என்ற நகரம் உள்ளது. இங்குள்ள சிறை ஒன்றில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளை பார்க்க வந்த சிலரை, அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டனர்.
வெனிசுலா நாட்டு சிறையில் கலவரம்! கொல்லப்பட்ட 29 கைதிகள் - killed
கராகஸ் : வெனிசுலா நாட்டு சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் 29 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த அந்நாட்டு காவல் துறையினர் சிறைக்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல் துறையினரை நோக்கிச் சுட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். பதிலுக்கு காவல் துறையினரும் சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளும் வீசப்பட்டதால் சிறை கலவர பூமியானது. இந்த கலவரத்தில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் கைதிகளின் தலைவன் எனக் கூறப்படும் வில்பிரடோ ரமோசும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த கலவரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்தனர். சிறையில் நடந்த கலவர சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.