ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் வடக்குப் பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று (மே.30) பீரங்கிக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது ஒரு பீரங்கிக் குண்டு, அங்குத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது. இதில் குறைந்தது 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.