தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிரியாவில் மீண்டும் மூண்ட போர் - பொதுமக்கள் 20 பேர் பலி! - northwest

டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யா படையின் உதவியுடன் அந்நாட்டு அரசுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுமக்கள் 20 பேர் பலி

By

Published : May 29, 2019, 1:02 PM IST

சிரியா உள்நாட்டுப் போரின் உக்கிரத்தை தாங்க முடியாத லட்சக்கணக்கானோர் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து அரசுப் படையின் அதிரடி தாக்குதல்களால் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சியாளர்கள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆகியோரிடமிருந்து மீண்டும் கைப்பற்றபட்டது.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டு படையுடன் ரஷ்ய படைகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை, அப்பாவி மக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஒரு மாதகாலமாக கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு பகுதியில், சிரியா - ரஷ்யா படையினர் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை அப்பாவி மக்கள் 229 பேர் உயிரிழந்தனர். 727 பேர் பலத்த காயமடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details