தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உச்சகட்ட குழப்பத்தில் ஈராக்: ஒரே நாளில் 17 பேர் மரணம்

ஹில்லா: போராட்டக்காரர்களுக்கு எதிராகக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Iraq

By

Published : Oct 29, 2019, 8:49 PM IST

ஈராக்கில் வேலையின்மையும் ஊழல்களும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் இதற்குக் காரணம் ஈராக் பிரதமர் அப்தல் அப்துல் மஹ்திக் என்று குற்றஞ்சாட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொதுமக்கள் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக வீதியில் இறங்கி ஈராக்கியர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தினர். அப்போது, திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாகப் போராட்டக்காரர்களை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியானதாகவும் 865 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் மேலும் மூவர் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை குறைந்தபட்சம் 250 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இருபெரும் பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளிய அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details