தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹஃகியா சோஃபியா: 1,400 பழமையான மசூதியில் பிரார்த்தனை மீண்டும் தொடக்கம் - ஹஃகியா சோஃபியா அருங்காட்சியகம்

இஸ்தான்புல் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பையும் மீறி 1,400 ஆண்டுகள் பழமையான ஹஃகியா சோஃபியா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தொடங்கியது.

Hafia
Hafia

By

Published : Jul 25, 2020, 10:47 AM IST

துருக்கி நாட்டின் முக்கிய வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுவது ஹஃகியா சோஃபியா. கீழை ரோம அரசாட்சியின் போது கட்டப்பட்ட இந்த ஹஃகியா சோஃபியா மாபெரும் கிறித்துவ பேராலயமாக 916 இருந்தது. பின்னர், ஒட்டாமன் பேரரசின்கீழ் கான்ஸ்டான்டினோபிள் வந்த போது கிபி 1453இல் மசூதியாக மாற்றப்பட்டது.

பின்னர் 20ஆம் நூற்றாண்டில், நவீன துருக்கியை குடியரசாக நிர்மானித்த கெமால் அட்டாட்டுர்க் 1934இல் அதனை ஒரு அருங்காட்சியமாக மாற்றினார். இது, மதசார்பற்ற துருக்கி குடியரசின் போற்றப்படும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், துருக்கி அதிபர் ரெசிப் தய்யிப் எர்டொகான் இதை மீண்டும் மசூதியாக மாற்றி, நேற்று (ஜூலை 24) முதல் வழிபாட்டுத்தலமாக செயல்பட அனுமதித்தார். இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஹஃகியா சோஃபியா மசூதி

இந்நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அறிவித்தபடி வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு மசூதி திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர். இதில் அதிபர் எர்டொகானும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

இதையும் படிங்க:அவதூறு பரப்பும் பாடப்புத்தகங்களுக்கு பாகிஸ்தான் பாடநூல் வாரியம் தடை!

ABOUT THE AUTHOR

...view details