தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவிலிருந்து மீண்டுவரும் உலகின் இரண்டாவது வயதான நபர்! - உலகில் இரண்டாவது வயதான நபர் செய்திகள்

பாரிஸ்: உலகின் இரண்டாவது வயதான நபரான 116 வயது பெண்மணி கரோனாவிலிருந்து தற்போது மீண்டுவருகிறார்.

Worlds second-oldest person survives COVID-19 at age 116
Worlds second-oldest person survives COVID-19 at age 116

By

Published : Feb 10, 2021, 3:25 PM IST

110 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று கருதப்படும் நபர்களின் விவரங்களை சரிபார்க்கும் ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணியை உலகின் இரண்டாவது வயதான நபர் என அறிவித்திருந்தது. இதனையடுத்து சமீபத்தில் ஆண்ட்ரேவிற்கு கரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ரே தற்போது மீண்டுவருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக பிரெஞ்சு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பார்வை திறன் அற்ற ஆண்ட்ரே, கரோனா இருப்பது உறுதியானபோது கவலைப்படவில்லை. இது குறித்து ஆண்ட்ரே இருக்கும் பராமரிப்பு இல்லத்தின் தகவல் தொடர்பு மேலாளர் டேவிட் தவெல்லா கூறுகையில், "அவர் உடல்நிலை பற்றி என்னிடம் கேட்பார். தான் குணமடைந்துவிடுவேன் என்று அவர் முழுவதுமாக நம்பினார். அதுமட்டுமின்றி, மற்ற நபர்களின் உடல்நிலைக் குறித்தும் கேட்டறிந்தார்” என்றார்.

இதையும் படிங்க...முகமது அலியை வென்ற குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details