வாஷிங்டன்:சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தது. இதில் உக்ரைன் நாடும் ஒன்று. இதற்கு முன்னதாக உக்ரைன், ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இதனால் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லைகளில் ஊடுருவி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துவருகிறது. உக்ரைனும் இழந்த பகுதிகளை மீட்க பதிலடிகொடுத்துவருகிறது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே 2014ஆம் ஆண்டு முதல் போர் சூழல் நிலவிவந்தது.
உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி முடிவு - உக்ரைனுக்கு உலக வங்கி நிதியுஉதவி
போரில் சிக்கி தவிக்கும் உக்ரைன் நாட்டிற்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
![உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி முடிவு World Bank ready to provide financial aid to Ukraine](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14562607-129-14562607-1645750598538.jpg)
இந்த நிலையில் நேற்று(பிப்.24) போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படை தொடர்ந்து இரண்டு நாள்களாக உக்ரைனில் வான்வழி, தரைவழி என்று தாக்குதல்களை நடத்திவருகிறது. இதனிடையே உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் குழு தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், உக்ரைன் நாட்டில் போர் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளால் உலக வங்கி குழு அதிர்ச்சியில் உள்ளது. உக்ரைன் மக்களுக்கு உலக வங்கி ஆதரவாக இருக்கும். உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் நிவாரணத்திற்காக உடனடி நிதியுதவி வழங்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீவிரமடையும் போர்... உக்ரைனில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மாணவர்கள்!