உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டெ செல்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்தச் சூழலில், மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்னரே, கடந்த மாதம் ஸ்புட்னிக் V என்ற கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்கள் மீது பயன்படுத்த ரஷ்யா அனுமதி வழங்கியது.
இதேபோல சீனாவும், மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிவதற்குள், குறைந்தது இரண்டு வகையான தடுப்புமருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு முன்னரே, கரோனா தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இவை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும், இந்தத் தடுப்புமருந்தின் பாதுகாப்புதன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், முறையான மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடையாமல் ஒப்புதல் அளிக்கப்படும் தடுப்புமருந்தை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று சுமார் 75 விழுக்காடு அமெரிக்கர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "பயனற்ற, பாதுக்காப்பில்லாத ஒரு தடுப்புமருந்தை உலக சுகாதார அமைப்பு என்றும் அங்கீகரிக்காது என்பதை நாங்கள் பொது மக்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.