தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 7:03 AM IST

ETV Bharat / international

ரெம்டெசிவிர் பயன்படுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

ரெம்டெசிவிர் பயன்படுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ரெம்டெசிவிர் பயன்படுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ரெம்டெசிவிர் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின், வழிகாட்டுதல் மேம்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ரெம்டெசிவிரில் நன்மையை விட , அதிகளவில் தீங்கு விளைவிக்கும் வாய்ப்பும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகதாரா அமைப்பின் இந்த வாழ்காட்டுதல்கள், பல்வேறு நாடுகளில் உள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தரவை உள்ளடக்கிய சான்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரங்களை பரிசீலித்தபின், இறப்பு விகிதங்கள் அல்லது நோயாளிகளுக்கு பிற முக்கிய விளைவுகளில் ரெம்டெசிவிர் எந்த பயனுள்ள விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று குழு முடிவு செய்தது.

உலகெங்கிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்போது அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மருந்துகளில் ரெம்டெசிவிர் மருத்தும் ஒன்றாகும்.

கரோனா நோயாளிகளுக்கு, தொற்றில் இருந்து விரைவில் குணமடைய இந்த மருந்து ஆரம்ப ஆராய்ச்சிக்கு பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான கிலியட் தயாரித்த, ரெம்டெசிவிர் மிகவும் விலை உயர்ந்ததாகும். கடந்த மாதம் இந்த மருந்தின் விற்பனை சுமார் 900 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது என்று கிலியட் நிறுவனம் தெரிவித்தது.

உலகளாவிய கரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து கோடியே 68 லட்சத்தை கடந்துள்ளது, கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், ரெம்டெசிவிர் குறித்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை வந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details