உலகப் பெருந்தொற்றான கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. மலேரியா, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளையே தேவைக்கேற்ப சோதனை முயற்சியாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனப்படும் மலேரியாவிற்கான மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் தேவைக்காக இந்தியா இந்த மருந்தை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, இந்த மருந்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் எனத்தெரிவித்துள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தற்போதைக்கு கரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயினைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆலோசனை கூறும் இந்தியர்