தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 1,83,000 பேருக்கு கரோனா!

ஜெனிவா: உலக அளவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,83,000 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO reports largest single-day increase in coronavirus cases
WHO reports largest single-day increase in coronavirus cases

By

Published : Jun 23, 2020, 4:26 AM IST

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காற்றை விட வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு புதிதாக 1,83,000 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பிரேசிலில் 54,771 பேருக்கும், அமெரிக்காவில் 36,617 பேருக்கும், இந்தியாவில் 15,400 பேருக்கும் இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,708,008ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இப்பெருந்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4,773 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் உலகளவில் இப்பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,61,715 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 22 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,20,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details