தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புதிய தொற்றை எதிர்கொள்ள தொலைநோக்குத் திட்டம் - உலக சுகாதார அமைப்பு - கொரோனா தொற்று உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் பெருந்தொற்றை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் இணைந்து தொலைநோக்குத் திட்டம் வகுக்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

World Health Organization
World Health Organization

By

Published : Nov 29, 2021, 7:41 PM IST

உருமாறிய புதுவகை ஒமைக்ரான் கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வது குறித்து உலக சுகாதார அமைப்பு தொலைநோக்குத் திட்டங்களை வகுக்கவுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் பெருந்தொற்றின் புதிய வடிவமான ஒமைக்ரான் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து சிறப்பு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் ஒரு பொது வரைவு உருவாக்கப்பட்டு அதை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இதுவரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்க் காங், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, தென்னாப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட 13 நாடுகளில் தொற்று பரவியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் தெற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளன.

இதையும் படிங்க:’பெண் எம்பிக்கள் போகப்பொருள் அல்ல...’ - பொங்கிய ட்விட்டர்வாசிகள்... வருத்தம் தெரிவித்த சசி தரூர்

ABOUT THE AUTHOR

...view details